கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கொலை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு  விசேட குழுவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்டவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார்  பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரி என அறியமுடிகிறது இவர் கிளிநொச்சி விநாயகபுரத்தை  சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்  தந்தையான கிருஸ்னகீதன் என அறிய முடிகிறது  

பொலிஸார் குறித்த பெண்ணின் தொலைபேசியின் தரவை பரிசீலனை செய்த பொழுது குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசியில் குறித்த நபருடனே நீண்ட நேரமாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.