பாரிய ரயில் விபத்தொன்று, புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் அதிகாரிகளின் சாமர்த்தியமான செயற்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் - ஸ்வஸ்திபுர ரயில் நிலையத்தில் இரு புகையிரதங்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் பயணித்துள்ள நிலையிலேயே குறித்த சம்பவம் இன்று அதிகாரிகளின் அதிரடி செயற்பாட்டால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் பெரும் உயிர்ச்சேதங்களும் தடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து அநுராதபுரத்திற்கு பயணித்த கடுகதி ரயிலும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுமே இவ்வாறு ஒரே தண்டவாளத்தில் பயணித்த நிலையில் விபத்திற்குள்ளாகவிருந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

புகையிரத சமிக்ஞைகளில் ஏற்பட்ட திடீர் கோளராறு காரணமாகவே பாரிய ரயில் விபத்து ஏற்படவிருந்ததாகவும் அதனையடுத்து உடனடியா விரைந்து செயற்பட்ட அதிகாரிகளின் சாமர்த்தியமான செயற்பாட்டில் விபத்தை தடுத்து நிறுத்தியதாகவும் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.