யால தேசிய சரணாலயம் நாளை முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவுகின்ற வறட்சியான காலநிலை மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த காலத்தில் அப் பகுதியிலுள்ள சுற்றுவிடுதிகளை புனர் நிர்மாணம் செய்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் யால தேசிய சரணாலயமானது எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படும் எனவும் சந்தன சூரிய பண்டார தெரிவித்தார்.