குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஊருபொக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

தேயிலை தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மீதே குளவிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளன.

இதில் 11 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 60 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் 6 பேர் ஆண்கள் எனவும் 4 பேர் பெண்களெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.