அமெரிக்காவின் நியூ மெக்ஸிக்கோ நகரிலிருந்து 49 பயணிகளுடன் பயணித்த பஸ் மீது எதிரே வந்த லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை நோக்கி குழந்தைகள் உட்பட 49 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த பஸ், நியூ மெக்ஸிக்கோ பகுதியில் வைத்து வீதியின் எதிர வந்த ட்ரக் ரக லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக விபத்தில் சிக்குண்ட 49 பேரில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் விபத்தில் சிக்குண்ட ஏனையோரில்  ஆறு பேர் சிகிச்சை பெற்று விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனையோர் நியூ மெக்ஸிக்கோ மற்றும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும்  நியூ மெக்ஸிக்கோ மாநில பொலிஸ் பேச்சாளர் வில்சன் தெரிவித்துள்ளார்.