வவுனியாவில் போலி நாணயத்தாள்களை வியாபர நிலையத்திற்கு கொடுத்தவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வியாபார நிலையத்திற்கு கொடுத்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று இரவு வேப்பங்குளம், பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிலுக்கான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்துவிட்டு 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார். 

இதையடுத்து குறித்த 5 ஆயிரம் ரூபாவில்  வர்த்தக நிலைய உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

மேலும் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வைத்திருந்த 24 வயதுடைய நபரைக் கைது செய்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.