மகியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மகியங்கனை பொலிஸாருக்கு நேற்றிரவு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தந்தையினதும் மகளினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

31 வயதுடைய தந்தையும் 11 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குடும்பப் பிரச்சினை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.