(ப.பன்னீர்செல்வம்)

விவசாயிகளை தூண்டி விட்டு நாட்டுக்குள் நெருக்கடிகளை தோற்றுவிப்பவர்கள் யார்? இதன் பின்னணி என்ன? என்பதை நாமறிவோம் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

நாம் பயணிக்கும் பாதை பிழையானதாக இருந்தால் அப்பாதையை மாற்றிக் கொண்டு சரியான பாதையில் பயணிக்க வேண்டும். விவசாயத் துறையில் எமது பயணம் மாற வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

"நச்சுத்தன்மையற்ற விவசாயம் தார்மீக நாடு" என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலகமும் விவசாய அமைச்சும் இணைந்து கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மண்டப வளவில் நடத்தும் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் விவசாயிகளை தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களை ஊக்குவித்து நெருக்கடிகளைத் தோற்றுவிப்பவர்கள் யாரென்பதையும் இதன் பின்னணியையும் நாம் அறிவோம். 

எனவே இதன் பின்னணியில் விவசாயத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இருப்பதாக எம்.பி.யொருவர் வெளியிட்ட கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நிராகரிக்கின்றேன். 

அத்தோடு இது தொடர்பில் எனது கவலையை தெரிவித்துக் கொள்கின்றேன்.