அமெரிக்க ஜனாதிபதியை விமர்சித்த பொஸ்டன் குளோப்பின் பணியாளர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரொபேர்ட் செயின் என்பவரே இந்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொஸ்டன் குளோப்பின் ஆசிரியபீடத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட இந்த நபர் அதன் பணியாளர்களை சுட்டுக்கொல்லப்போவதாக எச்சரித்துள்ளார்.

ஊடகங்களை டிரம்ப் விமர்சிப்பதை பொஸ்டன் குளோப் கண்டித்தமைக்காகவே அதன் பணியாளர்களை கொலைசெய்யப்போவதாக ரொபேர்ட் மிரட்டினார் என எப்பிஜ தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த இந்த நபரிடம் பல துப்பாக்கிகள் காணப்பட்டதாகவும் அவர் புதிய துப்பாக்கிகளை கொள்வனவு செய்துள்ளார் என்றும் எவ்பிஐ தெரிவித்துள்ளது.

ஊடகங்கள் மீதான அமெரிக்கா ஜனாதி-பதியின் கருத்துக்களிற்கான பதில்களை ஓருங்கிணைப்பதாக பொஸ்டன் குளோப் செய்தி வெளியிட்ட பின்னரே  செயின் தனது மிரட்டல்களை ஆரம்பித்துள்ளார்.

அமெரிக்க ஊடகங்களிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே  இந்த மிரட்டல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.