ஓய்ந்தது குள்ள மனிதர்களின் அட்டகாசம்

Published By: R. Kalaichelvan

31 Aug, 2018 | 10:45 AM
image

யாழ்.வட்டுக்கோட்டையில்  குள்ள மனிதர்களின் நடமாட்டம் தற்போது குறைந்துள்ளதாக வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இதேவேளை சமிபகாலமாக வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற குள்ள மனிதர்களின் அட்டகாசம் குறைந்துள்ளதாக அப் பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

வடமாகாண சபையின் 130 ஆவது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.அதன் போது , வடக்கில் இடம்பெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு வடமாகாண சட்டம் ஒழுங்கு அமைச்சர் எனும் ரீதியில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானத்தை உறுப்பினர் சபா.குகதாஸ் முன் மொழிந்தார். 

குறித்த தீர்மானத்தை சபையில் முன் மொழிந்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் அவர்  தெரிவிக்கையில் , 

கடந்த ஒரு மாத கால பகுதிக்கு மேலாக வட்டுக்கோட்டை , அராலி , சங்கரத்தை , துணைவி , சண்டிலிப்பாய் , சீரணி , மாசியப்பிட்டி , ஆனைக்கோட்டை,  நவாலி , மானிப்பாய் போன்ற இடங்களில் உள்ளே வீடுகளுக்கு இரவு வேளைகளில் முகத்தை மூடி கட்டியவாறு மக்களை அச்சுறுத்திய இனம் தெரியாத நபர்கள், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பி செல்வதுடன்  வீடுகளுக்கு கல் வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர்.

தொடர்ந்து இவ்வாறு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலில் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இத்தகைய செயற்பாடுகளுக்கு பின்னணியில் அரச இயந்திரத்துடன் சேர்ந்தியங்கும் சிவில் உடை தரித்த நபர்கள் இருந்தனர். அவர்களை நாம் அடையாளம் கண்டு , அவர்கள் தொடர்பிலான விபரங்களை வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கையளித்தோம்.

அதன் பின்னர் ஒரு சில நாட்களில் குறித்த சிவில் உடை தரித்தவர்கள் அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்நிலையில் தற்போது குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஓய்ந்துள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02