அக்­க­ரைப்­பற்று ஸ்ரீ மரு­தடி மாணிக்­கப்­பிள்­ளையார் ஆல­யத்தில் சில மாதங்­க­ளுக்கு முன்னர் காணாமல் போன பழம்­பெரும் பிள்­ளை­யாரின் சிலை கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரிவித்­தனர்.

குறித்த ஆலய தீர்த்தக் கிணற்­றி­லி­ருந்தே சிலை மீட்­கப்­பட்­ட­தா­கவும் பொலிஸார்  மேலும் குறிப்­பிட்­டனர்.

ஆல­யத்தில் இருந்த இச் ­சிலை சில மாதங்­க­ளுக்கு முன்னர் காணாமல் போன­தாக ஆலய நிரு­வா­கத்தால் அக்­க­ரைப்­பற்று பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு  செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே சந்­தே­கத்தின் பேரில் நேற்­று­ முன்­தினம்  மாலை பொலிஸார் ஆலய தீர்த்த கிணற்றை இறைத்து சோதனை செய்த நிலையில் குறித்த சிலை மீட்­கப்­பட்­டது.

இதே­வேளை சிலை காணாமல் போனது தொடர்பில் பல்­வேறு சந்­தே கங்கள் எழுந்­துள்ள நிலையில் விசா­ர­ணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.