வவுனியா - வேப்பங்குளத்தில் வர்த்தக நிலையத்தினை உடைத்து திருட முற்பட்ட நபர் பொதுமக்களினால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை நேற்று இரவு 10 மணியளவில் வர்த்தக நிலையத்தின் மின்சாரத்தினை துண்டித்து விட்டு கதவினையுடைத்து திருட முற்பட்ட சமயத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் திருடர்களை மடக்கி பிடித்துள்ளார்.

இதில் ஒருவர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

திருட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிலையும் பொதுமக்கள் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் மடக்கிப்பிடித்த திருடனை பொதுமக்கள் கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர்.