இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவ ஆரம்­பித்­துள்­ள­தாக சுகா­தார துறை­யினர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். இம்­மா­வட்­டத்தில் இது­வரையில் 1656 நோயா­ளர்கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­துடன்  இருவர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

குறிப்­பாக நிவித்­தி­கலை பிர­தேச செய­லகப்­பி­ரிவில் 232 பேர் என்ற எண்­ணிக்­கையில் கூடு­த­லான டெங்கு நோயா­ளிகள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். 

இதுதவிர குரு­விட்ட செய­லகப் பிரிவில் இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 159 பேரும், எக­லி­ய­கொடை பகு­தியில் 161 பேரும், எல­பாத்த பகு­தியில் 159 பேரும், இரத்­தி­ன­புரி நகரப் பகு­தியில் 124 பேரும், இரத்­தி­ன­புரி பிர­தேச சபைக்­குட்­பட்ட  பகு­தியில் 139 பேரும் இனங்­­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

நாடு முழு­வ­திலும் அரச பாட­சா­லை­களின் இரண்டாம் தவணை  விடு­முறை முடி­வ­டைந்து மூன்றாம் தவணை  ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் மீண்டும் டெங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.