யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது.தீப் பிடித்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும்  இயந்திரப் பகுதியில் பெற்றோல் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இச் சம்பவம் இன்று முற்பகல் 9.45 மணியளவில் இடம்பெற்றதாகவும் சாரதி வண்டியை பாடசாலைக்கு முன்பாக நிறுத்திவைத்துவிட்டு பாடசாலைக்குள் சென்றுள்ளார். 

அவர் நிறுத்திவைத்து சுமார் 20 நிமிடங்களில் முச்சக்கர வண்டியில் தீ பரவி எரிந்ததாக சாரதி தெரிவித்தார்.

முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்த சாரதி, நீர் ஊற்றி அணைக்க முயன்ற போது முச்சக்கர வண்டியின் முழுப் பகுதியிலும் தீ பரவி முற்றிலும் சேதமடைந்தாக அவர் தெரிவித்தார்.

குறித்த இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.