(நா.தனுஜா)

எதிர்வுகூற முடியாத வகையிலான சவால்களே தற்போது தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அவற்றை இனங்கண்டு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்தார்.

தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான ஆலோசனைகளை ஆராயும் வகையிலான சர்வதேச பாதுகாப்பு செயலமர்வு இன்று ஆரம்பமானது. இன்போதே மேற்கண்டவாறு கூறிய அவர்,

தற்போது பூகோளமயமாக்கல் மூலம் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இவ்வாறான நிலையில் நேரடியான சவால்களை விடவும், பாதுகாப்பு தொடர்பில் மறைமுகமான சவால்களே அதிகமாக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இதில் கலந்து கொண்டு உரையாற்றிய இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, 

பாதுகாப்பு தொடர்பான சர்வதேச செயலமர்வின் மூலம் பரந்துபட்ட கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் அறிவினைப் பகிர்ந்துகொள்ள எதிர்பார்த்துள்ளோம். 

பாதுகாப்பு என்பது விரிவானதொரு பரப்பாகும். அனைத்து சர்வதேச நாடுகளும் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பினை வலுப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.