(இராஜதுரை ஹஷான்)

நாட்டுக்காக தியாகங்களை செய்யும்போது பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை தோற்றம் பெறும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஞானசார தேரர், அங்கிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று இட மாற்றப்படும்போதே அவர் மேற்கண்ட கருத்தினை கூறியுள்ளார்.

மேலும் நாட்டுக்காகவே நான் இதுவரையில் குரல் கொடுத்து வந்தேன். தீர்ப்புக்களை வழங்கும்போது கடந்த கால விடயங்களையும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும் என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.