இந்திய வீடமைப்பு செயற்றிட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் குமாரவத்தைப் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 150 வீடுகளுக்கான அடிக்கல்லினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித்சிங் சந்து இன்று நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர்ளான ரஞ்சித் மத்தும பண்டார, பழனி திகாரம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊவா மாகாண சபை அங்கத்தவர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் வீடுகள் உட்பட பெருந்தோட்டப் பகுதிகளில் மொத்தம் 14 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. 

இதன் முதற்கட்டமாக கடந்த 13 ஆம் திகதி 404 வீடுகள் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.