கேரளா, கொச்சின் விமான நிலையத்திற்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

கடந்த வாரமளவில் கேரளாவில் வரலாறு காணாதளவில் கடும்  மழைப்பெய்ததால் அங்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தநிலையில் கொச்சினுக்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் கொச்சினுக்கான விமான சேவையை ஸ்ரீலங்கன் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்த நிலையில் குறித்த சேவை இன்றிலிருநு்து ஆரம்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.