கடந்த ஆட்சியின் போது மக்கள் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட அலரிமாளிககை தற்போது திருமாண நடனமாடும் களியாட்ட விடுதியாக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். 

பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,

அரசாங்கத்திற்குள் குழுப்பம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் பிரதமரைப் பற்றியும், பிரதமர் ஜனாதிபதியைப் பற்றியும், ஜனாதிபதி முழு அரசாங்கத்தைப் பற்றியும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.