(எம்.சி. நஜிமுதீன்)

அரசாங்கம் ஆரம்பித்துள்ள “என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” திட்டத்தில் இடம்பெறுகின்ற பாரிய மோசடிகளை இன்னும் சில தினங்களில் ஆதரங்களுடன் நிரூபிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்த அவர்,

மக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதன் ஓர் அங்கமாகவே “என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்ததை ஆரம்பித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.