வவுனியா - மடுக்கந்த குளத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்டபோது இன்று பிற்பகல் வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

 வவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் இன்று தமது வழமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று அப்பகுதியில் காணப்பட்டுள்ளது.

 இதையடுத்து, மடுக்கந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் குள அபிவிருத்திப்பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் நீதிமன்ற அனுமதியைப்பெற்று கைக்குண்டை செயலிழப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.