பெப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13  ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த இருவரையும் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.