கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி

Published By: J.G.Stephan

30 Aug, 2018 | 03:41 PM
image

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வீட்டின் முன்னாலுள்ள கிணறு ஒன்றில் தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை விழுந்து ஆபத்தான நிலையில், கொட்டக்காடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு வயதான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right