(இரோஷா வேலு) 

சட்டவிரோத போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும்  விசேட வேலைத்திட்டத்திற்கமைவாக இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது 49 ஆயிரத்து 676 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா, கொக்கெய்ன், அசீஸ் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்களும் புதிய வகை போதைப் பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதை மாத்திரைகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.