(ஆர்.யசி)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட விவகார்த்தின்  பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளதாக கூறி அவரை சிக்கவைக்க முயற்சிப்பவர்கள் இப்போது வாகன விபத்திலும் சிக்கவைக்து தண்டிக்க  முயற்சியெடுத்து வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமைய கட்சி தெரிவித்தது. 

வாகன விபத்தின் போது அவர் வாகனத்தில் இருக்கவில்லை எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. 

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் வாகனத்தில் இளைஞன் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மோதியதில் அந்த இளைஞன் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும்  வகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே   ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மாகாணசபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.