வலிகாம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் ஏழு பாடசாலைகள் உள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவித்தார். 

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், மயிலிட்டி றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, காங்கேசன் துறை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை காங்கேசன் துறை மகாவித்தியாலம், வசாவிளான் சி.விவேலுப்பிள்ளை வித்தியாலயம், பலாலி மேற்கு அமெரிக்கன் மிசன் பாடசாலை, சித்திவிநாயகர் வித்தியாலயம், ஆகியவை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இன்னும் விடுவிக்கப்படவேண்டிய பாடசாலைகளாக உள்ளது. 

இதேவேளை அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஜனாபதி செயலணிக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். 

எதிர்வரும் காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைகள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.