கொழும்பு, மாளிகாவத்தைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, மாலிகாவத்த பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் சந்தியிலேயே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில்வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரியே குறித்த துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

 காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 31 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.