தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தலைமையில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் நபர்களின் பெயர்களை குற்ற ஆவணங்களில் பதிவு செய்யவுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் சிறுவர்கள் மற்றும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும் நபர்களின் பெயர்களை குற்ற ஆவணங்களில் பதிவுசெய்யும் நடவடிக்கையானது அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் காரணமாக பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.