நீரிழிவுவை தடுக்கும் வயகரா : புதிய ஆய்வில்

22 Nov, 2015 | 12:48 PM
image

மலட்டுத் தன்மையை  நீக்கி ஆண்மையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் வயகரா மாத்திரையானது தற்போது நீரிழிவு நோயையும் தடுக்கும் என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

Health

அண்மையில், 42 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த மாத்திரைகள் இன்சுலின் உற்பத்தியில் சிறப்பாக பங்காற்றியது  தெரியவந்துள்ளது.

உடலில் இன்சுலின் உற்பத்தி குறைபாட்டின் காரணமாக ஏற்படும் நீரிழிவு நோயானது டைப் 1 மற்றும் டைப் 2 என இருவகைப்படும்.

இதில், சில்டெனாபில், பிளாசாபோ என்ற வயகரா மாத்திரைகள் டைப் 2 நீரிழிவு நோயை தடுக்கும் திறன் கொண்டது எனவும் இது உடலின் இன்சுலின் உற்பத்தியை சீராக்கி நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரையில் போஸ் போ டிஸ்டிரஸ் (பி.டி.இ.5) என்ற என்சைம் உள்ளது. இது உடலின் தசைகளை தளர்வுபடுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right