நெருக்கடியான நிலைமையிலும் மக்களை நாம் மறக்கவில்லை - பிரதமர் ரணில்

Published By: Priyatharshan

30 Aug, 2018 | 10:09 AM
image

நெருக்கடியான நிலைமையிலும் மக்களை நாம் மறக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலின் தோல்வியினால் நாம் திட்டு வாங்கினோம். பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தோம். எனினும் உள்ளூராட்சி மன்ற தோல்வியை கண்டு அஞ்சவில்லை. அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுத்து மக்களுக்கு சேவை செய்து வருகின்றோம். ஆகவே எமது வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்கொண்டு செல்வோம் எனவும் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டளவில் பாரிய அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைப்போம் என்று தெரிவித்த பிரதமர், 

மனதுக்கும் உடலுக்கும் தெரியும் மாற்றத்தை நாம் மொனராகலைக்கு கொண்டு வந்தோம். தேசிய அரசாங்கத்தின் பிரதிபலனை வெளிப்படுத்தவே இந்த கண்காட்சியை கொண்டு வந்தோம். 

நாம் கடந்த மூன்று ஆண்டுகளில் முதலில் விக்கெட்டுகளை காப்பாற்றினோம். பந்தை நன்றாக அவதானித்து விக்கெட்டுகளை பாதுகாத்து ஓட்டங்களை எடுத்தோம். மூன்று வருடங்களை கடந்து தற்போது நாம் போதுமான ஓட்டங்களை எடுத்து விட்டோம். தற்போது எமது துடுப்பாட்ட வீரர்கள் பந்துக்கு முகங்கொடுப்பதற்கு பழகிவி்ட்டனர். அடுத்த வரும் காலங்களில் அதிகளவு ஓட்டங்களை எடுக்க எமது துடுப்பாட்ட வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

நாம் நாட்டை பொறுப்பேற்கும் போது இலங்கையின் வருமானத்தை பார்க்கிலும் கடன் தொகை அதிகமாக இருந்தது. முன்னைய ஆட்சியின் போது பெறப்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை நாம் செலுத்தினோம். அத்துடன் முன்னைய ஆட்சியின் வீதி அபிவிருத்தி கடன்களையும் நட்டங்களையும்  நாமே செலுத்தினோம். முன்னைய ஆட்சியின் பாவத்தை நாமே போக்கினோம்.

பாடசாலை மலசல கூடம் பிரச்சினையாக இருந்தது. அதனை நாமே நிர்மாணித்து வருகின்றோம். கடனை மீள் செலுத்த சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று கடன் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. விருப்பம் இல்லாவி்ட்டாலும் வற் வரியை அதிகரித்தோம். திட்டு வாங்கினோம். விக்கெட்டுகளை பாதுகாப்பது இலகுவான காரியமல்ல.

தற்போது ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை காரணமாக ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 11 ஆயிரம் மில்லியன் ரூபாவாக ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தோம். நான்கு இலட்சம் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். சுற்றுலா பயணிகளை வருகையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நெருக்கடியான காலத்திலும் நாம் மக்களை மறக்கவில்லை.

2014 ஆம் ஆண்டிலும் பார்க்க குறைவான வாழ்க்கை செலவில் வாழ கூடிய நிலைமையை உருவாக்கினோம். வடக்கில் 40 ஆயிரம் வீடுகளும் மலையகத்தில் 10 ஆயிரம் வீடுகளும் மலையக புதிய கிராமங்களையும் நிர்மாணித்து வருகின்றோம். மொரகஹகந்த, மத்திய அதிவேக பாதை, மொனராகலை- செங்கலடி பாதை அபிவிருத்திகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்தோம்.நாம் செய்த அபிவிருத்தி திட்டத்தை மக்களுக்கு தாளமிட்டு  பிரசித்தம் செய்யவில்லை.

ஆகவே தற்போது அச்சம் கொள்ளாமல் துடுபாட்ட வீரர்கள் கிராமத்திற்கு சென்று ஆட்டங்களை ஆரம்பிக்கும் காலம் வந்து விட்டது. இலாபமீட்டும் நிறுவனமாக மத்தள விமான நிலையத்தையும் மாகம்புற துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வோம். மத்தளவுக்கு கடன் செலுத்த வேண்டியதில்லை. நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும். நாட்டு மக்களுக்காக 2025 ஆம் ஆண்டில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைப்போம். உள்ளூராட்சி தேர்தலின் தோல்வினால் நாம் திட்டு வாங்கினோம். பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தோம். எனினும் உள்ளூராட்சி மன்ற தோல்வியை கண்டு அஞ்சவில்லை. அதற்கு முகங்கொடுத்தோம் என்றார்.

மொனராகலை மாவட்டத்தின் வறுமையை ஒழித்து புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில் வளமான நாடு என்ற அரசாங்கத்தின் திட்டத்தை மக்கள் மயப்படுத்தும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா விசேட கண்காட்சியை நேற்று மொனராகலையில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37