இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஒருவர் ஆட்ட நிர்ணய சதி முயற்சிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளாகி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின் கையடக்கத்தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர்

இதேவேளை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் ஊழல் தடுப்பு பிரிவினர் ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தில் இரு இந்தியர்களை கைதுசெய்துள்ளனர்.

காலி, தம்புள்ள அணிகளிற்கு இடையில் கண்டியில் இடம்பெற்ற  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் இருபதிற்கு 20 போட்டியின் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்திய இருவரையே சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இரு இந்தியர்கள் குறித்து எங்களிற்கு சந்தேகம் எழுந்தது நாங்கள் அவர்களை  ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் கையளித்துள்ளோம் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களிற்கு முன்னர் இவ்வாறான ஒரு போட்டியின் போது சந்தேகத்திற்கு இடமான முறையில் செயற்பட்ட இந்தியர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

அல் ஜசீரா வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து இலங்கை ஆட்டநிர்ணய சதி முயற்சிகளிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் பின்னணியிலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.