வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. 

இந்த அமர்வின் போது, இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறும், வடகிழக்கு பிரதேசத்தில்  ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு உதவுமாறும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை கோருகின்ற பிரேரணை  விவாதிக்கப்படவுள்ளது.

அத்துடன் இன்று நடைபெறவுள்ள அமர்வில் குறித்த பிரேரணையை நிறைவேற்றுவதற்காக சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளவாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.