"உலகளாவிய இடையூறுகளைக் கொண்டதொரு யுகத்தில் பாதுகாப்பு" எனும் தொனிப்பொருளில், 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2018', இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த சர்வதேச மாநாடு, இரு நாட்களைக் கொண்டதாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகவும் நடைபெறவுள்ள இந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில், 100 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட 800 பாதுகாப்புத்துறைசார் பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர். மேலும், 13 வெளிநாட்டுப் பேச்சாளர்களும், 14 உள்நாட்டுப் பேச்சாளர்களும் இங்கு உரையாற்றவுள்ளனர்.
இம்மாநாட்டில், 'மக்கள் தொகை மாற்றமும் பாதுகாப்பு மீதான தாக்கங்களும்', 'தொழில்நுட்ப இடையூறுகள்', 'மனித தலையீடு காரணமான காலநிலை மாற்றம்' மற்றும் 'அரசியல் தீவிரவாதம்' ஆகிய தொனிப்பொருள்களுக்கு அமைவாக, 'மனிதக் காரணிகள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு', 'உள்நாட்டு இடப்பெயர்வின் உலகளாவிய சவால்',
'21 ஆம் நூற்றாண்டில் நகர்ப்புறப் பாதுகாப்பு', 'இணைய முரண்பாடுகள் மற்றும் எதிர்கால சக்தி', 'சமூக ஊடகங்களும் நம்பகத்தன்மையும், உலகளாவிய பாதுகாப்புச் சவால்கள்', 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி ஆயுதங்கள்', 'பிரதிபலிப்பு; தணிப்பதற்கான உத்திகள் (பிராந்திய முன்னோக்கு) இராணுவத்தின் பங்கு', இராணுவம் தொடர்பான விழிப்புணர்ச்சி மற்றும் உத்திகள் (உலகளாவிய முன்னோக்கு)',' காலநிலை பூகோள இயந்திரவியல்: சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் ',' வன்முறை இல்லாத அரசு வகிபாகம்', 'காலநிலை மாற்றம்: போர் எதிர்கால 'மற்றும்' வன்முறை தீவிரத்தைக் குறைப்பதில் தலைமைத்துவம்', ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இவ்வாண்டு இடம்பெறவுள்ள இம்மாநாட்டில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சிலி, கனடா, எகிப்து, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், இத்தாலி, கென்யா, கொரியா, மாலைத்தீவுகள், மொசாம்பிக், நெதர்லாந்து, நைஜீரியா, நைஜர், நோர்வே, நேபாளம், பிலிப்பைன்ஸ், ருவாண்டா, ரஷ்யா, சவூதி அரேபியா, செனகல், ஸ்பெயின், ஸ்வீடன், சூடான், தெற்கு சூடான், தான்சானியா, பிரித்தானியா, உக்ரைன், அமெரிக்கா, வியட்நாம், சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM