(ரொபட் அன்டனி)

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமாயின் சில காலத்திற்கு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னரே அவருக்கான பொது மன்னிப்பினை ஜனாதிபதி வழங்கலாம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் தவறில்லை என்றே நான் கருதுகின்றேன். எப்படியிருப்பினும் இது தொடர்பில்   ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பரிசீலித்து  எதிர்வரும் காலத்தில் தீர்மானம் எடுக்கும்.

எனினும்  ஞானசார தேரர்  பொதுமன்னிப்பு பெறவேண்டுமாயின் சில காலத்திற்கு தண்டனையை அனுபவிக்கவேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு வழங்கலாம் என்று சட்டம் கூறுகின்றது   எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.