(ரொபட்  அன்டனி)

மஹிந்த ராஜபக்ஷ  எதிர்வரும்  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் எமக்கு நல்லது. வேட்புமனுதாக்கலின் போதே அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும். அப்போது எதிரணியில் உள்ளவர் இலகுவாக வெற்றிபெற்று விடுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்கத்தில் தகவல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இதனைத் குறிப்பிட்ட அமைச்சர், சட்ட நிபுணரக்கள் இதுதொடர்பில்  பல்வேறு  கருத்துக்களை வெளியிடுகின்றனர்.  இறுதியில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.