வவுனியா சீட் (seed) நிறுவனத்தின் வலுவூட்டல் வளாக  விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களும், கல்வியினூடாக முன்னேற்றத்தை நோக்கிய திட்டத்தினுடைய மாணவர்களும் கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு ஏக்கலயில் அமைந்துள்ள வீரகேசரி காரியலயத்தை பார்வையிட்டனர்.குறித்த மாணவர்களின் கல்விச் சுற்றுலாவானது ஏக்கலயில் அமைந்துள்ள வீரகேசரி பத்தரிகை நிறுவனத்தின்  அச்சு இயந்திரம், மற்றும் இணையத்தள செய்திப் பிரிவினை (Digital Media ) யும் பார்வையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கது.