பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கான வீட்டுத்திட்டத்தை இந்தியா, சீனா, ஜப்பான் என யார் வந்து கட்டினாலும்  எங்களுக்குத் தேவை வீடு கட்டப்பட வேண்டும் என்பதே. என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் 

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் 

வீட்டுத்திட்டம் தொடர்பில் அமைச்சர் மனோகணேசனுக்கும் எனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. 

இது தொடர்பில் பிரதமரிடம் தான் கேட்க வேண்டும். அது பிரதமரின் வீட்டத்திட்டம். எனக்குத் தரப்பட்ட வீட்டுத்திட்டத்தை நான் உரியமுறையில் செய்து வருகிறேன் எனத் தெரிவித்த அவர் மூன்று வருடங்களாக யார் வீடுகளை கட்டுவது என்பது தொடர்பில் கதைத்து கதைத்து ஒரு முடிவும் எட்டப்படாது இருக்கிறது இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான். எனவும் குறிப்பிட்டார்.