மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இன்று காலை கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

இன்று காலை 7மணியளவில் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் வசித்து வந்த இரத்தினம்மா 65வயதுடைய பெண் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று குறித்த பெண்ணின் கணவர் வவுனியாவிற்கு சென்றுள்ளார். 

வீட்டிற்கு அருகே இருக்கும் மகள் இன்று காலை வழமைபோல் பால் கொடுப்பதற்குச் சென்றபோது தாயாரைக்காணவில்லை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை இதையடுத்து வீட்டிலுள்ள கிணற்றிற்குள் சென்று பார்வையிட்டபோது கிணற்றுக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நேற்று இரவு வேளையில் தண்ணீர் எடுப்பதற்கு கிணற்றுக்குச் சென்றபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.