தேயிலை கொழுந்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதனால் தாம் மீண்டும் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 ரூபாவுக்கும் அதிக விலையில் காணப்பட்ட தேயிலை கொழுந்தின் விலை தற்போது 80 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது. 

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையே தேயிலையின் வீழ்ச்சுக்கான காரணம் என கூறிய இலங்கை தேயிலை சபையின் ஆணையாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க, இந்தப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.