(எம்.மனோசித்ரா)

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி அடகு பிடிக்கும் நிலையத்தினை நடத்தி வந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரால் நடத்தப்பட்டு வந்த அடகு பிடிக்கும் நிலையத்தில், உரிமம் உறுதிப்படுத்தபடாத  24 மோட்டார் சைக்கிள்களும், 4 முச்சக்கர வண்டிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 31 வயதுடைய நெலும்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் இவரிடமிருந்து மீட்கப்பட்ட வாகனங்கள் திருடப்பட்டவை என தெரியவந்துள்ளது.

வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த சந்தேக நபர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.