முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைவாகவே அவர் இன்று ஆஜராகி இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

மேலும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வாக்குமூலம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.