விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த சுற்றிவளைப்பு இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் "சூட்டி அம்மா"  எனப்படும் 53 வயதுடைய பெண் போதைப்பொருள் வியாபாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து ஒரு கிராமும் 200 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.