பொலிகண்டி கரையோரப் பகுதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 60 கிலோ கேரளக் கஞ்சாவைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பி.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இளவாலைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இளவானைப் பொலிஸாரும் வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து கடந்த 21 ஆம் திகதி பொலிகண்டி கடற்கரையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கு நடமாடிய இன்பர் சிட்டியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 60 கிலோ கஞ்சாப் பொதியையும் மீட்டனர்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் சந்தேக நபரை சில தினங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை நடத்திய வல்வெட்டித்துறை பொலிஸார் அண்மையில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தினார்கள். அதன்போது எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் சந்தேக நபரை வைக்குமாறு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி கைப்பற்றப்பட்ட கஞ்சா கான் மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்து அறிக்கையினை பெறுமாறும் பணித்தார்.