(எம்.மனோசித்ரா)

கொழும்பு கிரான்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர் 41 வயதுடையவர் எனவும், கிரான்பாஸை சேர்ந்தவர் எனவும் பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேகநபர் இன்று  மாளிகாந்த நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.