ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மகனும், நடிகர் ஜூனியர் என்.டி ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நலகொண்டா மாவட்டம் - நர்கெட்பள்ளி, அட்டன்கி நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போதே ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த ஹரிகிருஷ்ணா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.