சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு மாணிக்ககற்களை கொண்டு வந்த மூன்று சீனப் பிரஜைகளை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சீனப் பிரஜைகளுள் இரண்டு பெண்கள் அடங்குவதுடன் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாணிக்கக் கற்களின் பெறுமதியானது 46 இலட்சத்துக்கும் அதிமாகும்.

அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.