ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நேபாளத்துக்கு பயணமானார்.

நேபாளத்தின் தலைநகர் காத் மண்டுவில் இடம்பெறவுள்ள வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேபாளத்துக்கு பயணமானார்.

இம் மாநாட்டில் நேபாளம், பங்களதேஷ் , பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.