நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெறுமனே இருக்கவில்லை ; சிவமோகன்

Published By: Digital Desk 4

29 Aug, 2018 | 04:53 PM
image

நாங்கள் இந்த மண்ணின் பாராளுமன்ற உறுபினர்களாக வெறுமனே பாராளுமன்றில் இருக்கவில்லை பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இங்கு மேற்கொள்ளப்படும்  ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் நீண்டகாலமாக கூறிக்கொண்டிருந்த நிலையில் இன்று வெடித்துள்ளது.

மகாவலி அபிவிருத்தி சபையின் ஊடாக தமிழ் மக்களின் காணிகள் அபகரித்துக்கொண்டிருந்தமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று நாங்கள் இந்த மண்ணின் பாராளுமன்ற உறுப்பினர்களாக வெறுமனே பாராளுமன்றில் இருக்கவில்லை அண்மையில் கடற்தொழில் பிரச்சினை வந்தபோது விமல் வீரவன்சவுடன் வாக்குவாதாத்தில் ஈடுபட்டு எமது உரிமையினை நிலைநாட்டியுள்ளோம்.

நேற்றையதினம் ஜனாதிபதியிடம் இந்த கருத்தினை தெரிவித்த போது அதாவது எட்டுப்பேருக்கு அண்மையில் மகாவலி அதிகாரசபை ஊடாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கபட்டு  கொடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னோம். 

அவர் நேரடியாக தொலைபேசியில் மகாவலி அதிகார சபையிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சொல்கின்றார்கள் இல்லை என்று அப்போது நாங்கள் சொன்னோம் இல்லை காணிகள் கொடுக்கப்பட்டது உண்மை என்றுசொன்னோம் எங்களுக்கு முன்னாலே அறிவித்தல் கொடுத்திருந்தார்.

அதுகொடுத்திருந்தாலோ கொடுக்காமல் விட்டிருந்தாலோ இத்துடன் நிறுத்திவிட்டு என்னை சந்தியுங்கள் என்று சொல்லியிருந்தார் சந்தித்து கதைத்த பின்னர்தான் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

நாங்கள் சந்தர்ப்பங்களை பாவிக்காமல் இல்லை அடுத்த சந்திப்பு ஒக்டோபர் 3 ஆம் திகதி கிடைக்கவுள்ளது. புதுக்குடியிருப்பு படையினரின் ஆக்கிரமிப்பு, வட்டுவாகல் காணிப்பிரச்சினை சொல்லி இருக்கின்றோம் எனவே ஒக்டோபர் மாதம் ஜனாதிபதியுடன் பேசக் கிடைத்த சந்தர்பத்தை சரிவர பயன்டுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09