தன்னெழுச்சியான போராட்டம் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வுகாண முடியும் - சிவசக்தி ஆனந்தன் 

Published By: Digital Desk 4

29 Aug, 2018 | 01:00 PM
image

அரசியல் கட்சியினை தாண்டி தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வுகாண முடியுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இன்றையதினம் இடம்பெற்ற மகாவலி அதிகாரசபையின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராடடத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், 

இந்த மகாவலி “எல்” வலயம் தொடர்பில் மூன்று கட்டங்களாக அண்மைக்காலத்தில் தமிழ்மக்களின் காணிகளுக்கு சிங்கள மக்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மகிந்த ஆட்சிகாலத்தில்  இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல்  வழங்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய ஜனாதிபதியினால் அதற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக வெலிஓயா பிரதேசத்தினை சேர்ந்த மக்களுக்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளுடன் வவுனியாவில் நடமாடும் சேவை ஊடாக அதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தமாதம் 6 ஆம் திகதி 8 சிங்கள மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஜனாதிபதியின் செயலணி கூட்டத்தில் ஜனாதிபதி மகாவலி எல் வலயத்திற்கு கீழ் காணி அனுமதிப்பத்திரம் வழங்கியதற்கான ஆதாரம் உங்களிடம் என்ன இருக்கின்றது என்று சவால் விட்டு பேசியுள்ளார். 

அங்கே கலந்துகொண்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினராவது முல்லைத்தீவு மாவட்டத்தில மகாவலி எல் வலயத்திற்கு கீழ் எட்டுப்பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஆறுமாத காலத்திற்குள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது என்ற செய்தியனை அங்கு சொல்லாமல் கடந்த மூன்றரை ஆண்டுகாலம் இந்த ஆட்சிக்கு சகலவழிகளிலும் அரசினை பாதுகாத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

எமது பிரதிநிதிகள் இவ்வாறு இருந்தால் மக்களின் காணிப்பிரச்சினை, காணாமல்போனோர் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. ஆகவே இன்றைய மக்கள் போராட்டம் போல் தொடர்ச்சியாக அரசியல்கட்சியினை தாண்டி தன்னெழுச்சியான மக்கள் போராட்டம் மூலம்தான் தீர்வு காணப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09