இரு ரோந்துக் கப்பல்களை இலங்கைக்கு கையளிக்கும் முகமாக  ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இன்று மாலை இலங்கை வருகின்றார்.

இன்று மாலை இலங்கைக்கு வருகைதரும் ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நாகேனி 30 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படுகின்றார்.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரு ரோந்து கப்பல்களை கையளிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் நாளை இடம்பெறுகின்ற நிலையில் அதில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேநேரம் ஜப்பான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரச தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். 

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதயில் இலங்கைக்கு கையளிக்கப்படவுள்ள இரு ரோந்து கப்பல்களும் இலங்கை கடலோர பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

ஜப்பான் வெளிவிவகார இராஜங்க அமைச்சரின் இலங்கைக்கான வருகையானது ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமையுமென இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.